dark_mode
Image
  • Friday, 03 July 2026

தாம்பரத்தில் பரபரப்பு: அமைச்சர் சரத்குமார் வீடியோ விவகாரம் – மிரட்டல் விடுப்பதாக பள்ளி நண்பர் புகார்

தாம்பரத்தில் பரபரப்பு: அமைச்சர் சரத்குமார் வீடியோ விவகாரம் – மிரட்டல் விடுப்பதாக பள்ளி நண்பர் புகார்

செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சரண் ஜெயராமன், அமைச்சர் சரத்குமாரின் பள்ளி நண்பர். திமுக ஆதரவாளரான அவர், அமைச்சர் தொடர்பான வீடியோவை தான்தான் வெளியிட்டதாக சந்தேகித்து, அமைச்சர் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டி வருவதாக தாம்பரம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த வீடியோவை வெளியிட்டது சரண் ஜெயராமன்தான் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்த நான்கு நாட்களாக சிலர் அவரது வீட்டின் முன்பு கத்தியுடன் சுற்றித் திரிந்து மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய சரண் ஜெயராமன், தாம்பரம் காவல் துறை துணை ஆணையரிடம் மனு அளித்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

related_post