dark_mode
Image
  • Thursday, 06 March 2025

ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்! - அண்ணாமலை

ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்! - அண்ணாமலை

ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என அண்ணாமலை ட்விட்.

தமிழகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதுகளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் BDO ஆக பணியாற்றி வரும் ராஜேந்திரன் அவர்கள் தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமுதாய ரீதியாக திட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார் இன்று ராஜ கண்ணப்பன் அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது.

சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா? வழக்குப் பதிவு செய்யாமல் துறை மாற்றுதல் எந்த மாதிரியான முடிவு? அமைச்சர் மேல் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்பினால் ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்! - அண்ணாமலை

comment / reply_from

related_post