dark_mode
Image
  • Friday, 03 July 2026

அரசியல் பரபரப்பு: அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்.!

அரசியல் பரபரப்பு: அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்.!

தலைப்பு: அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்; அரசியல் பரபரப்பு

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தலைமையிலான அணியும், கே. பழனிசாமி தலைமையிலான அணியும் என கட்சி இரண்டாகப் பிரிந்த நிலையில், ஆளும் தவெகவுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதுவரை அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது.

முன்னதாக பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்களும் விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

தவெகவில் இணைந்த பிறகு பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், "இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் அரசியல் புரட்சியை முதல்வர் விஜய் நிகழ்த்தியுள்ளார். இனி தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியே தொடரும்" என்று தெரிவித்தார்.

சி. விஜயபாஸ்கர் பேசுகையில், "மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி முதல்வர் விஜய். தவெகவும் தமிழ்நாடும் ஒன்றே என்ற மக்களின் எண்ணத்தை முன்னிறுத்தி, வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும். இது வெறும் தொடக்கம் மட்டுமே. முதல்வரின் அனுமதியுடன் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்துவோம்" என்றார்.

மேலும், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி டெல்டா உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

related_post