dark_mode
Image
  • Monday, 28 April 2025

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசினார். அவர் கூறியதாவது:
 
 
’பாஜக  அரசியல் சாசனத்தை சேதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலுக்கு முன்னதாக பாஜக 400 இடங்கள் வெல்லும் என்ற உறுதியுடன் இருந்தது. அவர்கள் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், அரசியல் சாசனத்தை முற்றிலும் கிழித்து எறிந்திருப்பார்கள். 
 
புதிய குடியரசு, புதிய அரசியல் சாசனம் என மாற்றம் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் இந்திய மக்கள் 400 இடங்களும் தரவில்லை; மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் வழங்கவில்லை. இதனால் தான் சாசனம் பாதுகாக்கப்பட்டது என்று கருதலாம்.
 
 
ஆனால், பாஜக அரசாங்கம் இன்னும் சாசனத்தை தாக்கும் முயற்சிகளை கைவிட்டுவிடவில்லை. ஆர்எஸ்எஸ் சிந்தனையில் வளர்ந்தவர்கள் திட்டமிட்ட முறையில், சிறு சிறு சட்ட மாற்றங்கள் மூலம் சாசனத்தின் அடிப்படைகளை பாதிக்கிறார்கள். 
குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு சட்டங்களில் திருத்தம், கல்வி உரிமை குறைத்தல் ஆகியவை அதன் உதாரணங்கள். புல்டோசர் போல் உடனடியாக தாக்கமில்லை; ஆனால் உளி, சுத்தியலால் மெதுவாக உடைப்பது போல கையாளுகிறார்கள். நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று சிதம்பரம் எச்சரித்தார்.

comment / reply_from

related_post