அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் பேசிய தவெக தலைவர் விஜய், அறிஞர் அண்ணாவை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நேற்றும், இன்றும் நடந்து வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு ஆலோசனை, அறிவுறைகளை வழங்கி வருகிறார்.
அவ்வாறு இன்று பேசிய அவர் “வெறுமனே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் ஆரம்பிக்கப்பட்ட கட்சியல்ல தமிழக வெற்றிக் கழகம். மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும், எந்த விதமான ஊழலும் இல்லாத சுத்தமான அரசை உருவாக்க வேண்டும் என்பதே நம் எண்ணம்.
அதனால் மக்களை தைரியமாக சென்று சந்தித்து பேசுங்கள். இந்த இடத்தில் அண்ணா சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மக்களிடம் போ.. மக்களிடம் கற்றுக்கொள்.. மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி.
வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு போவது போலவும், திருவிழாவிற்கு போவது போலவும் வாக்களிக்கவும் கொண்டாட்டத்துடன் வருமாறு செய்ய வேண்டும். அப்படி ஒரு மனநிலையை நீங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போது தெரியும் தவெக ஒரு அரசியல் கட்சி அல்ல.. அது ஒரு விடுதலை இயக்கம் என்று” என பேசியுள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description