dark_mode
Image
  • Saturday, 18 May 2024

" பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை " நெகிழ்ச்சி சம்பவம்..!

தமிழக முதல் முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம் மேட்டூர் அணையிலிருந்து காவேரி பாசனத்திற்காக நீர் திறக்க நேற்று மேட்டூர் சென்றிருந்தார். இதன்போது, அவரிடம் பலரும் மனுக்கள் வழங்கிய நிலையில், அதில் பெறப்பட்ட ஒரு மனு தொடர்பான விவரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பான மனுவில், சௌமியா இராதாகிருஷ்ணன் என்ற சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் கொரோனா நிதிக்காக பணம் ஏதும் இல்லை. அதனால், எனது கழுத்தில் இருக்கும் இரண்டு பவுன் செயினை கடிதத்துடன் கொரோனா நிதிக்காக உங்களிடம் வழங்குகிறேன். அதனை தாங்கள் (தமிழக முதல்வர்) பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுதொடர்பான கடிதத்தில், " இரா.சௌமியா ஆகிய நான் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக இருந்து வருகிறேன். எனது தந்தை ஆவின் ஓய்வுபெற்ற பணியாளர். என் உடன்பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் திருமணம் முடிந்து கணவரின் இல்லத்தில் வசித்து வருகின்றனர். எனது தந்தை பணியிலிருந்து பெற்ற சம்பளத் தொகை அனைத்தையும் எங்கள் மூவரையும் படிக்க வைக்கவும், சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார்.

நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள். ஆனால் வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனது தந்தை பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில், எனது தாயாருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் நுரையீரல் பழுதடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 12 ஆம் தேதி மார்ச் மாதம் 2020 ஆம் வருடம் இறந்து விட்டார்.

எனது தந்தை பணி ஓய்வு பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும், அம்மாவின் மருத்துவத்திற்கு செலவு செய்து விட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. சுமார் ரூபாய் 13 இலட்சம் செலவு செய்தும் எனது தாயை காப்பாற்ற முடியவில்லை. எங்களுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால், அம்மா இறந்தபிறகு மேட்டூரில் குடியிருந்த வாடகை வீட்டை காலி செய்து எனது தந்தையின் பிறந்த ஊருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி இருக்கிறோம்.

எங்கள் ஆதார் விலாசம் அனைத்தும் மேட்டூர் முகவரியிலேயே உள்ளது. எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக மாதம் ரூபாய் 7000 மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூபாய் 3000 போக, மீதி 4000 பணத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமான எனது சகோதரிகளும் எங்களுக்கு உதவி செய்ய வசதி வாய்ப்பு இல்லாத சூழலில் இருக்கிறார்கள். நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு நீங்கள் (தமிழக முதல்வர்) அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால், நான் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை ஏதும் வேண்டாம். எனது ஊருக்கு அருகிலேயே தனியார் நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு ஏதேனும் ஏற்படுத்திக் கொடுத்தால் கூட போதுமானது. இந்த வேலைவாய்ப்பு எனக்கு கிடைத்தால், எனது தாய் மீண்டும் உயிர் பெற்று வந்ததாக தாயன்புடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி... " என்று பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பான கடிதத்தை பதிவு செய்துள்ள தமிழக முதல்வர், " மேட்டூர் அணையை திறக்க சென்ற போது பெறப்பட்ட மனுக்களின், சகோதரி இரா. சவுமியாவின் கடிதம் என் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் உதவ முன்வந்துள்ள அவரது மனதை பாராட்டுகிறேன். பொன் மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்துள்ளார்.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description