ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

கோவையில் நடந்து வரும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் வாக்குச்சாவடி முகவர்களின் சக்தி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கோவையில் நேற்றும் இன்றும் நடந்தது. இதில் தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது தவெக தொண்டர்களிடையே பேசிய ஆதவ் அர்ஜுனா “2026ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள். 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது. புதிய வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஊழல் ஆட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு. இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள். அதை தேர்தலில் அவர்கள் காண்பார்கள்.
வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டைத் தடுக்கும் சக்தி தேர்தல் முகவர்களிடம் இருக்கிறது. தவறு நடந்ததாக நாம் குரல் கொடுத்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் அன்றைய தினம் சீல் வைக்க முடியாது” என பேசியுள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description