ஓபிஎஸ் போட்ட தேர்தல் வழக்கு : நிராகரிக்க முடியாது - கைவிரித்த உயர்நீதிமன்றம்

2024 மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தது. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக பலாப் பழம் சின்னத்தில் ஓபிஎஸ் களமிறங்கினார். தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவே போட்டியிடுவதாக விளக்கமும் அளித்தார்.
தேர்தல் முடிகள் வெளியாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 5,09,664 வாக்குகளைப் பெற்று 1,66,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் 3,42,882 வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்
ஜெயபெருமாள் 99,780 வாக்குகளைப் பெற்றார்.
ஜெயபெருமாள் 99,780 வாக்குகளைப் பெற்றார்.
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி வெற்றி பெற்றதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உயர் நீதிமன்றம் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. அதில், “ராமநாதபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ் கனி சொத்துக் கணக்கை முறையாக காண்பிக்கவில்லை. வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை மறைத்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, நவாஸ் கனி வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
தனக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நவாஸ் கனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க முடியாது, இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என நீதிபதி அறிவித்து, நவாஸ் கனி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இது நவாஸ் கனி தரப்பு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் தற்போதைய நிலை
சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக இருந்து வருகிறார். கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவாரா அல்லது புதிய கட்சி தொடங்குவாரா என்பது விரைவில் தெரியவரும்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description