விரைவில் இன்ஸ்டாகிராமில் ( Instagram ) புதிய வசதி-பரிந்துரைக்கப்பட்ட பக்கங்கள்

இன்ஸ்டாகிராம் செயலில் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகளை முதன்மை பக்கத்தில் காணும் வசதியை இணைப்பதற்கான சோதனை நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சமூக வலைத்தள பயனர்களின் விருப்பமான செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்த செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்கேற்ப புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பதிவுகளை அவர்களின் முதன்மை பக்கத்தில் காண்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்த சோதனைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் அதிகம் விரும்பும் மற்றும் தேர்வு செய்யும் தரவுகளைக் கொண்டு அவர்களுக்கு அதுசார்ந்த பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பரிந்துரைக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் தரவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு சோதனை முறையில் இந்த வசதி கிடைக்கும் எனவும் பயனர்களின் வரவேற்பைத் தொடர்ந்து இந்த வசதி நீட்டிக்கப்படலாம் எனவும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description