தமிழ்நாடு கேராளாவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாடு கேராளாவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. காலக் கெடு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பீகாரில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற்ற இது போன்ற பணிகளில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 99.55% படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று (டிசம்பர் 11) கடைசி நாள் என்பதால், படிவங்களைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பல லட்சம் வாக்காளர்கள்
பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (சார் பணிகள்) பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், தேர்தல் ஆணையம் இந்த பணிகளைத் தொடர்ந்தது. போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே இதன் நோக்கம் என தேர்தல் ஆணையம் கூறியது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இந்த சார் பணிகள் அறிவிக்கப்பட்டன.