dark_mode
Image
  • Friday, 29 November 2024

இந்தியாவில் ஒரே மாதத்தில் 1,82,241 கணக்குகள் முடக்கம்... பயனர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் ஒரே மாதத்தில் 1,82,241 கணக்குகள் முடக்கம்... பயனர்கள் அதிர்ச்சி!

ந்தியா முழுவதும் கடந்த ஒரே மாதத்தில் 1,84241 ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 25 வரை, 1,84,241 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலான கணக்குகள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அனுமதியின்றி பகிரப்படும் நிர்வாணப் படங்கள் இவைகளை பதிவிட்டக் கணக்குகள். அத்துடன் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக 1303 கணக்குகளும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.


மொத்தமாக, 185,544 கணக்குகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ள எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் 2021ம் ஆண்டின், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி இந்தியப் பயனர்களிடமிருந்து 18,562 புகார்களை, தமது குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கூடுதலாக, மேல்முறையீடு செய்த 118 பயனர்களின் கணக்குகளை இடைநீக்கம் செய்யாமல் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக 4 கணக்குகளை, அதன் நிலைமைகேற்ப மறுஆய்வு செய்து இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளோம். கடந்த ஒரு மாத காலத்தில் கணக்குகள் குறித்த பொதுவான கேள்விகள், 105 பயனாளர்களின் கோரிக்கைகள் மூலம் கேட்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கணக்குகள் மீதான தடை நீக்கம் வெறுப்புப் பிரசாரம் வயது வந்தோருக்கானப் பதிவுகள் அவதூறு/வன்கொடுமை இவைகளை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 25 வரை, எக்ஸ் தளம் 2,12,627 கணக்குகளையும், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக 1,235 கணக்குகளையும் முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே மாதத்தில் 1,82,241 கணக்குகள் முடக்கம்... பயனர்கள் அதிர்ச்சி!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description