dark_mode
Image
  • Friday, 29 November 2024

AI தொழில்நுட்பத்துடன் #iPhone 16 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!

AI தொழில்நுட்பத்துடன் #iPhone 16 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!

ப்பிள் நிறுவனம் தனது 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர் பாட்ஸை நேற்று அறிமுகம் செய்தது.

 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடைபெற்றது. நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை வெளியிட்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.ஃப்ளாஷ் உடன் இந்த போன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பு, வெள்ளை, பிங்க், கிரீன் மற்றும் நீல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 16 வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 16, 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் விரைவாகவும், போன் ஹேங் ஆகாமல் பயன்படுத்துவதற்காக புதிய A18 chip பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக இந்த போனில் ஆப்பிள் ஏஐ இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நீங்களாகவே விரும்பியவாறு எடிட் செய்து கொள்வதோடு, அதனை ஸ்டிக்கராகவும் மாற்றிக் கொள்ளலாம்.இவற்றின் விலை என்ன?

ஏர்பட்ஸ்:

எர்பட்ஸ் 4 - ரூ. 12,900

வாட்ச் சீரிஸ்:

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா - ரூ.89,900

ஆப்பிள் வாட்ச் எஸ்இ - ரூ.24,900

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 - ரூ. 46,900

ஐபோன்:

ஐபோன் 16 புரோ மேக்ஸ் - ரூ. 1,44,990

ஐபோன் 16 புரோ - ரூ. 1,19,900

ஐபோன் 16 பிளஸ் - ரூ. 89,900

ஐபோன் 16 - ரூ.79,900

AI தொழில்நுட்பத்துடன் #iPhone 16 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description