dark_mode
Image
  • Friday, 04 April 2025

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீனா சீர்குலைக்கலாம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீனா சீர்குலைக்கலாம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இந்தியாவில் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதே போல தென் கொரியாவில் பொதுத் தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதியும் நடக்கின்றன.

இந்நிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் அபாய ஆய்வு மையத்தின் பொது மேலாளர் கிளின்ட் வாட்ஸ் தனது இணைய பக்கத்தில், 'இந்தியா, தென் கொரியா, அமெரிக்காவில் நடக்கும் தேர்தல்களில் சீனா தனது சுய நலனுக்காக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பொதுமக்களின் எண்ணத்தை மாற்ற முயற்சிக்கலாம்.

மேலும், வடகொரியா ஹேக்கர்களும் இந்த தேர்தல்களை இலக்காக கொண்டு செயல்படலாம். தேர்தல் முடிவுகளை பாதிக்கும் செய்திகள், உள்ளடக்கங்கள் குறைவாக இருந்தாலும், மீம்ஸ்கள், வீடியோக்கள், ஆடியோக்களை அதிகரிப்பதில் சீனாவின் சோதனை முயற்சிகள் அதிகரிக்கும். வாக்காளர்களிடையே பிளவை ஏற்படுத்த சீனா போலியான சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துகிறது' என கூறப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீனா சீர்குலைக்கலாம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

comment / reply_from

related_post