dark_mode
Image
  • Friday, 03 April 2026

விஜய் பிரச்சாரத்தில் விபத்து – காவலர் காயம்

விஜய் பிரச்சாரத்தில் விபத்து – காவலர் காயம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பில், விஜய் தனது இரண்டாவது தொகுதியாக திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருச்சியில் நடைபெற்ற ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்தின் போது, எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், மரக்கடை பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, சிலிண்டர் விலை உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை விமர்சித்தார்.

பிரச்சாரம் முடிந்து அவர் புறப்படும் வேளையில், பெரும் திரளான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் மீது, கட்சி நிர்வாகி காரொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காவலர் சதீஷ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விஜய்யின் பிரச்சாரங்களில் கூட்ட நெரிசல் தொடர்பான சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

related_post