dark_mode
Image
  • Thursday, 03 September 2026

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 5 பேருக்கு மேல் கூட தடை.!

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 5 பேருக்கு மேல் கூட தடை.!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி 5 பேருக்கு மேல் ஒன்று கூடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது மற்றும் ஊர்வலங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவும், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளன.

இந்த முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன் அனுமதியின்றி பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்துவதுடன், 5 பேருக்கு மேற்பட்டோர் ஒன்றாக கூடுவதற்கும் அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்வுகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் விழாவில் பங்கேற்போர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

related_post