dark_mode
Image
  • Thursday, 03 September 2026

ராசிபலன் 03-09-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 03-09-2026 வியாழக்கிழமை

 

ராசிபலன் 03-09-2026 வியாழக்கிழமை

மேஷம்
செப்டம்பர் 03, 2026

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : வாய்ப்பு உண்டாகும்.
பரணி : மாற்றம் பிறக்கும்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------


ரிஷபம்
செப்டம்பர் 03, 2026

பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : பதற்றமின்றி செயல்படவும்.

---------------------------------------


மிதுனம்
செப்டம்பர் 03, 2026

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். பணி மாற்றத் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.
திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.
புனர்பூசம் : கட்டுப்பாடுகள் குறையும்.

---------------------------------------


கடகம்
செப்டம்பர் 03, 2026

சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி உண்டாகும். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
ஆயில்யம் : வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------


சிம்மம்
செப்டம்பர் 03, 2026

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கோவில் நலப்பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். உடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வேலையாட்களுடன் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : மாற்றங்கள் காணப்படும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


கன்னி
செப்டம்பர் 03, 2026

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------


துலாம்
செப்டம்பர் 03, 2026

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : அனுபவம் உண்டாகும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------


விருச்சிகம்
செப்டம்பர் 03, 2026

காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன்-மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : லாபம் மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------


தனுசு
செப்டம்பர் 03, 2026

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்குகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மறைமுகமான சில போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மனதை உறுத்திய சிலர் கவலைகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : கவலைகள் விலகும்.

---------------------------------------


மகரம்
செப்டம்பர் 03, 2026

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : மாற்றம் பிறக்கும்.
அவிட்டம் : லாபம் மேம்படும்.

---------------------------------------


கும்பம்
செப்டம்பர் 03, 2026

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


மீனம்
செப்டம்பர் 03, 2026

சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உருவாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------