dark_mode
Image
  • Saturday, 29 August 2026

தேர்தல் வழக்குகள்: விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்கள் — திமுக வேட்பாளர்களிடம் பதில் கோரிய உயர்நீதிமன்றம்

தேர்தல் வழக்குகள்: விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்கள் — திமுக வேட்பாளர்களிடம் பதில் கோரிய உயர்நீதிமன்றம்

சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு திமுக வேட்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்த திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

related_post