dark_mode
Image
  • Wednesday, 25 March 2026

மருத்துவ தேவைக்கான பணம் எடுத்துச் செல்லுவோருக்கு சலுகை – வாட்ஸ்அப் ஆதாரமும் செல்லும்: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

மருத்துவ தேவைக்கான பணம் எடுத்துச் செல்லுவோருக்கு சலுகை – வாட்ஸ்அப் ஆதாரமும் செல்லும்: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.

மார்ச் 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் நபர்கள் அதற்கான உரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான ஆதாரம் இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் வாகனங்கள் மற்றும் நபர்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்காக பணம் எடுத்துச் செல்லும் நபர்கள், அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், மருத்துவமனை ரசீது அல்லது மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை வாட்ஸ்அப் மூலம் காட்டி உறுதிப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவணங்கள் சரியாக இருந்தால் பணத் தொகைக்கு வரம்பில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரொக்கப் பணம் மட்டுமன்றி, கூகுள் பே, போன்பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் கண்காணிப்பில் உள்ளன. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும்.

அதேபோல், வியாபாரிகள் தொழில் தேவைக்காக பணம் எடுத்துச் செல்லும் போது, வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது கொள்முதல் ரசீதுகள் போன்ற ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

related_post