புத்தம் புதிய டிவிஎஸ் XL 100 பைக்.. பண்டிகை கால சிறப்பு அறிமுகம்..!
இந்த பண்டிகை காலத்தில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பல புதிய வாகனங்களையும், ஏற்கனவே சந்தையில் அறிமுகமான வாகனங்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் அதிகமாக விற்பனையாகும் டிவிஎஸ் XL மட்டும் விதிவிலக்கா என்ன? டிவிஎஸ் XL 100 புதிய அறிமுகம் பற்றி பார்க்கலாம்.
டிவிஎஸ் XL அல்லது மொபெட் என்றாலே நினைவுக்கு வருவது பளிச்சென்ற நீல நிற மொப்பெட். ஆனால், பல்வேறு வண்ணங்களில் காணப்படும் போட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் இரு சக்கர வாகனங்களைப் போலவே, டிவிஎஸ் நிறுவனமும் மொபெட்டில் பல்வேறு வண்ண ஸ்கீம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும், சமீபத்தில் அறிமுகமான கோரல் வண்ண ஸ்கீம் மனதை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மாடல் டிவிஎஸ் XL 100 தான். இப்போது, இந்த மாடல் மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் ஈர்க்கும் வண்ணத்தில் ஒரு மாடலை அறிமுகப்படுத்தியிருப்பதைப் பற்றி அறிக்கை வெளியானது.
'கோரல் சில்க்' என்ற புதிய நிறத்தில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் XL100 மொபெட் இந்த பண்டிகைக்கால கொண்டாட்டத்தை வண்ணமயமாக்க அறிமுகமாகி உள்ளது. மின்ட் ப்ளூ, லஸ்ட்டர் கோல்டு, ரெட் பிளாக், கிரே ப்ளாக் மற்றும் தற்போது புதிய அறிமுகமான கோரல் சில்க் ஆகிய ஐந்த வெவ்வேறு இரு-வண்ண ஸ்கீமில் தற்போது புதிய மாடல் XL100 மொபெட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிதாக அறிமுகமாகி இருக்கும் இந்த பெயின்ட் தீம், அதன் 'i-Touch Special Edition' என்ற டிரிம்மில் சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கிள்-டச் ஸ்டார்ட் சிஸ்டம், எல்ஈடி DRL, மொபைல் சார்கின் ஆகிய அம்சங்களுடன், XL 100 மொபெட்டுக்கே உரிய ஹைட்ராலிக் ரியர் ஷாக்ஸ், 110 mm டிரம் பிரேக்குகள் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த XL மொபெட்டில் வேறு ஏதேனும் மாற்றங்கள் அல்லது அப்டேட்கள் இருக்கிறதா என்று பார்க்கும் போது, பெயின்ட் ஸ்கீம் மட்டும் தான் மாறியுள்ளது. மொபெட்டின் அம்சங்கள், என்ஜின் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக, இதன் மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே தான் உள்ளன.
2020 இன் எரிபொருள் இன்ஜெக்ஷன் டெக்னாலஜிக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யபப்ட்ட 99.7 cc ஃபோர்-ஸ்ட்ரோக் ஒற்றை-சிலிண்டர் என்ஜின் கொண்ட இந்த XL 100 நாடு முழுவதும் உள்ள கிராமப்புறம், பேரூர் மற்றும் சிறு நகரங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மனைவி கொடுமை தாங்கல.. ப்ளீஸ் என்னய ஜெயிலுக்கு அனுப்பிருங்க - போலீசுக்கு கணவர் நூதன கோரிக்கை
கிராமவாசிகள், டவுன்களில் வசிக்கும் பல சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தர அளவிலான வணிகம் செய்பவர்கள், விவசாயிகள், சந்தை வியாபாரிகள் உட்பட பலரின் நம்பிக்கையும் பெற்ற வாகனம் இதுதான் என்று கூறலாம்.
99.7 cc டிவிஎஸ் XL 100 இன் ஆரம்ப விலை ரூ. 39,990 முதல் கிடைக்கிறது.