dark_mode
Image
  • Monday, 27 July 2026

பாமக நிழல் பட்ஜெட் வெளியீடு: அரசு வேலை, மதுவிலக்கு, பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்

பாமக நிழல் பட்ஜெட் வெளியீடு: அரசு வேலை, மதுவிலக்கு, பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, கட்சியின் 24-வது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னை தி.நகரில் வெளியிட்டார். இதில் வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம், சமூக நலன், மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய அம்சங்கள்

  • 5 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு அரசு வேலை; முதல் கட்டமாக 2026–27ஆம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு அரசு பணி.
  • 25,000 ஆசிரியர்கள், 5,000 உதவிப் பேராசிரியர்கள், 17,000 குரூப்-4 பணியாளர்கள் நியமனம்.
  • சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹300 மானியம்; ஆண்டுக்கு அதிகபட்சம் 6 சிலிண்டர்களுக்கு வழங்கப்படும்.
  • அக்டோபர் 2 முதல் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும்.
  • குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும்.
  • பழைய ஓய்வூதியத் திட்டம் 2027 ஜனவரி முதல் மீண்டும் அமல்படுத்தப்படும்.
  • பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் தொடரும்; பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது.
  • விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு.
  • பொதுத்துறை வங்கிகளில் பெற்ற ₹1 லட்சம் வரையிலான பயிர்க் கடனையும் அரசு ஏற்கும் என தெரிவிப்பு.
  • வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 இழப்பீடு; வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ₹24,000 உரிமைத்தொகை.
  • மின்கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
  • 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிப்பு.
  • 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் காஞ்சிபுரம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி மாவட்டங்களில் தொடங்கப்படும்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு நிதியுதவி ₹25,000 ஆக உயர்த்தப்படும்.
  • தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளுக்கு ₹10,000 அபராதம்; மீண்டும் மீண்டும் விதிமீறினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.
  • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என அறிவிப்பு.
  • சத்துணவு பெறும் மாணவர்களுக்கு மாலையில் பால் மற்றும் ரொட்டி வழங்கப்படும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

பொருளாதார மேலாண்மை, வேலைவாய்ப்பு, சமூக நலன், கல்வி, விவசாயம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிழல் பட்ஜெட், அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து பிற அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post