தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வட்டாட்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு.!
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி 20 வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, ஓட்டப்பிடாரம் சிப்காட் தனி வட்டாட்சியர் (நி.எ) N. சீனிவாசன் ஏரல் வருவாய் வட்டாட்சியராகவும், எட்டயபுரம் சிப்காட் தனி வட்டாட்சியர் (நி.எ) N. ஜெயலட்சுமி எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியராகவும், திருச்செந்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) S. அந்தோணி ஜெபராஜ் விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியராகவும், கோவில்பட்டி கோட்டக்கலால் அலுவலர் S. அறிவழகன் (எ) சிவராஜ் கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியராகவும், கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் R. அப்பணராஜ் கயத்தாறு வருவாய் வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சாத்தான்குளம் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) S. தங்கசாமி திருச்செந்தூர் வட்டாட்சியராகவும், திருச்செந்தூர் வட்டாட்சியர் S. தங்கமாரி சாத்தான்குளம் தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), கயத்தாறு வருவாய் வட்டாட்சியர் M. பாலசுப்ரமணியன் கயத்தாறு தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), கயத்தாறு தனி வட்டாட்சியர் (ச.பா.தி) C. மலர்தேவன் கோவில்பட்டி கோட்டக்கலால் அலுவலராகவும், ஏரல் வருவாய் வட்டாட்சியர் M. செல்வக்குமார் தூத்துக்குடி டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி டாஸ்மாக் உதவி மேலாளர் M. மணிராஜன் ஓட்டப்பிடாரம் சிப்காட் தனி வட்டாட்சியராகவும் (நி.எ), ஓட்டப்பிடாரம் சிப்காட் தனி வட்டாட்சியர் (நி.அ) சொ.தங்கையா உடன்குடி அனல்மின் திட்ட தனி வட்டாட்சியராகவும் (நி.எ), உடன்குடி அனல்மின் திட்ட தனி வட்டாட்சியர் (நி.எ) M. கோபால் திருச்செந்தூர் தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), தூத்துக்குடி டாஸ்மாக் கிடங்கி மேலாளர் S.S. செல்வபிரசாத் உடன்குடி அனல்மின் திட்ட தனி வட்டாட்சியராகவும் (நி.எ), உடன்குடி அனல்மின் திட்ட தனி வட்டாட்சியர் (நி.எ) S. செந்தில் முருகன் தூத்துக்குடி டாஸ்மாக் கிடங்கி மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் S. சுபா கோவில்பட்டி மதுரை - தூத்துக்குடி இரயில்வே திட்ட தனி வட்டாட்சியராகவும் (நி.எ), விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியர் D. கண்ணன் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி வட்டாட்சியராகவும், தூத்துக்குடி கோவில் நிலங்கள் தனி வட்டாட்சியர் M. பிரபாகரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும்,
தூத்துக்குடி பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் R.V. ஜானகி தூத்துக்குடி நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி வட்டாட்சியராகவும் (நி.எ), தூத்துக்குடி நெடுஞ்சாலைகள் தனி வட்டாட்சியர் (நி.எ) I. ஆன்சி ஓட்டப்பிடாரம் சிப்காட் தனி வட்டாட்சியராகவும் (நி.எ) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி மாறுதல் பெற்ற அலுவலர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும் என்றும், இதில் எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.