ராசிபலன் 29-08-2026 சனிக்கிழமை
ராசிபலன் 29-08-2026 சனிக்கிழமை
மேஷம்
ஆகஸ்ட் 29, 2026
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் குறையும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். வெளியூர் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வேறுபாடுகள் குறையும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : லாபங்கள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 29, 2026
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த இலக்குகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : தெளிவுகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 29, 2026
கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் இலாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : லாபகரமான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 29, 2026
பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 29, 2026
உடல் ஆரோக்கியம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தள்ளிப் போன சில காரியங்கள் மீண்டும் நடைபெறும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : அறிமுகங்கள் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 29, 2026
உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். குழந்தைகளுக்கான சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே வேறுபாடுகள் நீங்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : மேன்மை ஏற்படும்.
அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 29, 2026
கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பொழுதுபோக்குத் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். திடீர் பயணங்கள் மூலம் உடல் நிலையில் சோர்வுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : சோர்வுகள் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 29, 2026
வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.
அனுஷம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 29, 2026
வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இழுபறியான கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : முடிவுகள் கிடைக்கும்.
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 29, 2026
நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். சவாலான வாதங்களையும் சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : இழுபறிகள் மறையும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 29, 2026
வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்து செயல்படவும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல் நிறம்
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 29, 2026
எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வர்த்தக பணிகளில் பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : சேமிப்புகள் குறையும்.
உத்திரட்டாதி : தாமதம் உண்டாகும்.
ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------