dark_mode
Image
  • Friday, 03 April 2026

ஜன நாயகன் படம் தடை – கூட்டுச் சூழ்ச்சி: திருச்சியில் விஜய் கடும் தாக்கு..!

ஜன நாயகன் படம் தடை – கூட்டுச் சூழ்ச்சி: திருச்சியில் விஜய் கடும் தாக்கு..!

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், தனது ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீடு தாமதமாகி வரும் விவகாரம் குறித்து முதன்முறையாக மௌனத்தை கலைத்தார்.

“கடந்த இரண்டு மாதங்களாக என் ‘ஜன நாயகன்’ படம் வெளியே வர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. கரூரில் நடந்த சம்பவம் ஒரு சூழ்ச்சி என்றால், இந்தப் படத்தை தடுக்கிறதும் அதேபோன்ற கூட்டுச் சூழ்ச்சிதான்,” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

மேலும், தேர்தல் காலத்தில் இந்த படம் வெளியானால் அது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் சிலருக்கு உள்ளதாகவும், அதனால் திட்டமிட்ட முறையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை மறைமுகமாக சுட்டிக்காட்டிய அவர், “என் குரலை அடக்க முயற்சிக்கிறார்கள்” என்றார்.

“நான் இங்கு வந்தது அரசியல் பேச மட்டும் இல்லை; எனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்க தான். உண்மையை மக்கள் முன் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம்,” என்று உருக்கமாகப் பேசியார்.

தொடர்ந்து, “எத்தனை தடைகள் வந்தாலும் நான் பின்னடைய மாட்டேன். இந்தப் பயணம் இப்போதுதான் ஆரம்பம். மக்களுடன் சேர்ந்து நான் தொடர்ந்தே செல்வேன்,” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

விஜயின் இந்த பேச்சு, தேர்தல் சூழலில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

related_post