dark_mode
Image
  • Friday, 03 April 2026

செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை

செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை

செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்ததாக கூறப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் 57 சாட்சிகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பலர் அரசுத் தரப்புக்கு எதிராக சாட்சி அளித்தனர்.

இந்த நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து அனைவரையும் விடுவித்தது.

அரசியல் காரணங்களால் தங்கள்மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்பே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

related_post