dark_mode
Image
  • Friday, 05 September 2025

சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: டிரம்ப் புலம்பல்

சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: டிரம்ப் புலம்பல்

வாஷிங்டன்: இந்தியா மற்றும் ரஷ்யா சீனாவுடன் நெருக்கமாகி வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அமெரிக்கா இரண்டு காரணங்களால் மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளது. முதலில், அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இரண்டாவதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதனால் கிடைக்கும் வருமானம் உக்ரைன் போருக்கு பயன்படுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்காக மேலும் 25 சதவீதம் சேர்க்கப்பட்டதால் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு பதட்டமடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி சீனாவுக்குச் சென்றார். அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மூவரும் ஒன்றாக கலந்துரையாடினர். இவர்களின் சந்திப்பு புகைப்படங்கள் உலகளவில் பரவலாக பேசப்பட்டன.

இதைக் கண்டு அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் டிரம்பின் ஆலோசகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். அதன்பின் தனது பதிவில் டிரம்ப், “இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் போலத் தெரிகிறது. அவர்கள் நீண்டகால வளமான எதிர்காலத்தை பெறட்டும்” என்று குறிப்பிட்டார்.

related_post