dark_mode
Image
  • Friday, 05 September 2025

இன்று 5, நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இன்று 5, நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 5) மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (செப்டம்பர் 6) கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் அதிக மழை பெறக்கூடும்.

அதேபோல், செப்டம்பர் 9ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

related_post