டெல்லி - இந்தூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்... PAN PAN அலர்ட் - 20 நிமிடங்கள், நடுவானில் பதறிய 161 பயணிகள்

இந்தோர் இடையே சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் வான்வழியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் "பான்-பான்" சிக்னல் ஒலிக்கச் செய்து, பாதுகாப்பாக தரையிறங்கியது. இதில் பயணிகள் யாருக்கும் சேதம் ஏற்படாதது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் தொழில்நுட்ப கோளாறு
விமானம் டெல்லியில் இருந்து இந்தோர் நோக்கி புறப்பட்டு, சுமார் 20 நிமிடங்கள் பறந்தபோது, விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு, "பான்-பான்" சிக்னல் அனுப்பினர். இந்த சிக்னல், அவசர நிலைக்கு அடுத்த முக்கிய எச்சரிக்கை அழைப்பு என்பதால், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.
‘பான்-பான்’ அழைப்பு என்ன?
சர்வதேச விமானப் போக்குவரத்தில், விமானத்தில் அபாயகரமான அவசர நிலை ஏற்பட்டால் "மே-டே" அழைப்பு விடுக்கப்படும். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் அவசர கவனிப்பு தேவைப்பட்டால் "பான்-பான்" அழைப்பு அனுப்பப்படும். இந்த நிலை ஏற்பட்டவுடன் அருகிலுள்ள விமான நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.விமானத்தில் இருந்த சுமார் 180-க்கும் மேற்பட்ட பயணிகள், திடீர் அதிர்வு மற்றும் சத்தத்தால் அச்சமடைந்தனர். சிலர் உடனடியாக விமான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டனர். ஊழியர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு அறிவித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தனர். இதனால் பயணிகள் பதற்றம் குறைந்தது.
பாதுகாப்பான தரையிறக்கம்
விமானிகள் மிகுந்த அனுபவத்துடன் விமானத்தை கட்டுப்படுத்தி, 40 நிமிடப் பயணத்திற்குப் பிறகு இந்தோர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானம் தரையிறங்கியவுடன் தொழில்நுட்ப குழுவினர் எஞ்சினை பரிசோதித்து வருகின்றனர்.அதிகாரிகள் விளக்கம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “டெல்லி – இந்தோர் பயணத்தின்போது, விமானத்தின் ஒரு எஞ்சினில் சின்ன தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. எங்கள் பயிற்சி பெற்ற விமானிகள் உடனடியாக சிக்னல் அனுப்பி, பாதுகாப்பாக தரையிறங்கினர். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். தொழில்நுட்ப குழு தற்போது விமானத்தை பரிசோதித்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பே எங்கள் முதலாவதான முன்னுரிமை” எனக் கூறப்பட்டுள்ளது.