dark_mode
Image
  • Monday, 01 September 2025

வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்தது!

வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்தது!

வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்து, ரூ.1,738க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் இன்று (செப் 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்தது. ஒரு சிலிண்டர் ரூ.1,738க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ரூ.33.50, ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் ரூ.24 விலை குறைந்தது. தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

 

வணிக சிலண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும் வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

related_post