காங்கிரஸ் பொறுப்பிலிருந்து விலகிய மாணிக்கம் தாகூர் – கூட்டணி வெற்றிக்காக பணியாற்றுவேன் உறுதி
காங்கிரஸ் பொறுப்பிலிருந்து விலகிய மாணிக்கம் தாகூர் – கூட்டணி வெற்றிக்காக பணியாற்றுவேன் உறுதி
மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மார்ச் 28ஆம் தேதியே இந்த முடிவை கட்சி தலைமையிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திலும் கடும் விவாதம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்த மாணிக்கம் தாகூர், “பொறுப்பில் தொடர விருப்பமில்லை என்பதையே தெரிவித்தேன்; இதை தேவையற்ற சர்ச்சையாக மாற்ற வேண்டாம்” என்றார்.
மேலும், மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய முயற்சி மேற்கொள்வேன் என்றும் உறுதியளித்தார்.