"இந்த பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது" - திருமாவளவன் அட்வைஸ்
கூலியை வாங்கிக்கொண்டு சமூக ஊடகங்களில் அவதூறு செய்யும் அரசியல் அற்பர்களின் பேரணியில் விசிக தொண்டர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது.
இந்நிலையில் விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் விடுத்துள்ள செய்தியில், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை தொடர்பான எந்தப் பேரணியிலும் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டிப்பது விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும், யாருடனும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த தலித் இயக்கத்தையின் விசிக எதிர்நிலையில் வைத்து அனுகியது இல்லை என்றும், திமுக கூட்டணிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.