dark_mode
Image
  • Saturday, 20 June 2026

அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் புகைப்படம் வைத்து ரீல்ஸ்: தவெக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.!

அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் புகைப்படம் வைத்து ரீல்ஸ்: தவெக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.!

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்கள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆதரவு மற்றும் விமர்சனக் கருத்துகள் பரவி வருகின்றன.

சமீபகாலமாக, தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அதனை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வெளியிடுவது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் புகைப்படத்தை சுவரில் மாட்டி, தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த We The Leader இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, அரசுப் பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுங்கட்சியினர் என்பதற்காக வகுப்பறைகளில் சென்று மாணவர்களின் கல்விச் சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் முதல்வர் விஜய் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது நடவடிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

related_post