ராசிபலன் 13-05-2026 புதன்கிழமை
ராசிபலன் 13-05-2026 புதன்கிழமை
மேஷம்
மே 13, 2026
புதிய இலக்குகளால் அலைச்சல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வாகனம் மற்றும் மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கேளிக்கை செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : அலைச்சல் உண்டாகும்.
பரணி : லாபகரமான நாள்.
கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
மே 13, 2026
சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். காப்பீடு பணிகளில் ஆதாயம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
மே 13, 2026
உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதரவுகள் மேம்படும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாய பணிகளில் சில நுட்பங்களை கற்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவுகள் மேம்படும்.
திருவாதிரை : புத்துணர்ச்சியான நாள்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
மே 13, 2026
திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். வெளிவட்டார பணிகளில் அலைச்சல்களால் புதிய அனுபவங்கள் உருவாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
---------------------------------------
சிம்மம்
மே 13, 2026
பணிபுரியும் இடத்தில் சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். குழப்பத்தால் பணிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் அவரமின்றி பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி செயல்களில் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : தாமதம் ஏற்படும்.
பூரம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கன்னி
மே 13, 2026
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அனுகூலம் ஏற்படும்.
அஸ்தம் : தாமதங்கள் குறையும்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.
---------------------------------------
துலாம்
மே 13, 2026
உடன் இருப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : மதிப்பளித்து செயல்படவும்.
சுவாதி : முக்கியத்துவம் அதிகரிக்கும்.
விசாகம் : உற்சாகமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
மே 13, 2026
மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் அமைதியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நில நிறம்
விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம்
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : அமைதியான நாள்.
---------------------------------------
தனுசு
மே 13, 2026
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஒப்பந்தம் செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மே 13, 2026
மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : போட்டிகள் விலகும்.
அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
---------------------------------------
கும்பம்
மே 13, 2026
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் கூடும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார சிக்கல்கள் சீராகும். நண்பர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். வசதி வாய்ப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபங்கள் இரட்டிப்பாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அமைதியான நாள்.
சதயம் : வாய்ப்புகள் மேம்படும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
மே 13, 2026
குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் குறைகளை பெரிதுபடுத்துவதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------