dark_mode
Image
  • Thursday, 07 May 2026

ராசிபலன் 07-05-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 07-05-2026 வியாழக்கிழமை

 

ராசிபலன் 07-05-2026 வியாழக்கிழமை

மேஷம்
மே 07, 2026

மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் புரிதல் உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : போட்டிகள் விலகும்.
பரணி : ஒத்துழைப்பான நாள்.
கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------


ரிஷபம்
மே 07, 2026

சிந்தனைகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கணிதத் துறைகளில் விவேகம் வேண்டும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோக பணிகளில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

கிருத்திகை : அலைச்சல் ஏற்படும்.
ரோகிணி : ஆலோசனை கிடைக்கும்.
மிருகசீரிஷம் : விரயம் ஏற்படும்.

---------------------------------------


மிதுனம்
மே 07, 2026

பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


கடகம்
மே 07, 2026

நீண்ட நாட்களாக இருந்து வந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். செல்லப் பிராணிகளிடம் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

புனர்பூசம் : வாய்ப்பு ஏற்படும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.

---------------------------------------


சிம்மம்
மே 07, 2026

வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் அனுசரித்து செல்லவும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : ஆசைகள் நிறைவேறும்.
உத்திரம் : மாற்றமான நாள்.

---------------------------------------


கன்னி
மே 07, 2026

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். பணி நிமித்தமான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------


துலாம்
மே 07, 2026

அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். குறுந்தொழில் செயல்களில் சாதகமான சூழல் ஏற்படும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
சுவாதி : தீர்வு கிடைக்கும்.
விசாகம் : ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 07, 2026

வியாபாரத்தில் கனிவான அணுகுமுறைகளால் லாபங்கள் மேம்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு அதிகாரிகளால் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : லாபங்கள் மேம்படும்.
அனுஷம் : நன்மைகள் உண்டாகும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


தனுசு
மே 07, 2026

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். உத்தியோக நெருக்கடிகள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மூலம் : வருவாய் மேம்படும்.
பூராடம் : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : நெருக்கடிகள் மறையும்.

---------------------------------------


மகரம்
மே 07, 2026

உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பணி மாற்றம் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : பயணங்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆர்வமின்மை உண்டாகும்.

---------------------------------------


கும்பம்
மே 07, 2026

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இலக்கை நோக்கிய சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் அமைதியும் புத்துணர்ச்சியும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------


மீனம்
மே 07, 2026

அரசு வழியில் மதிப்புகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிக்கலான சில விஷயங்களுக்கு தெளிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
உத்திரட்டாதி : சுதந்திரம் மேம்படும்.
ரேவதி : தெளிவுகள் ஏற்படும்.