dark_mode
Image
  • Tuesday, 05 May 2026

ராசிபலன் 05-05-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 05-05-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 05-05-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
மே 05, 2026

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : முயற்சிகள் கைகூடும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


ரிஷபம்
மே 05, 2026

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். தொழில் பயணத்தில் பொறுமை வேண்டும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

கிருத்திகை : குழப்பங்கள் ஏற்படும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


மிதுனம்
மே 05, 2026

மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், அனுபவங்களும் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.
திருவாதிரை : மாற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


கடகம்
மே 05, 2026

பணிபுரியும் இடத்தில் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நினைத்த பணிகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------


சிம்மம்
மே 05, 2026

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைபணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். வியாபார நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : மாற்றமான நாள்.

---------------------------------------


கன்னி
மே 05, 2026

விவசாய பணிகளில் நுட்பமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்

உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.

---------------------------------------


துலாம்
மே 05, 2026

மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும். இயந்திர பணிகளில் புதிய ஓப்பந்தம் சாதகமாகும். எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 05, 2026

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் புதிய பாதைகள் மனதில் புலப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : புதுமையான நாள்.

---------------------------------------


தனுசு
மே 05, 2026

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : சோர்வுகள் ஏற்படும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


மகரம்
மே 05, 2026

எதிர்பாராத சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

உத்திராடம் : சுதந்திரம் மேம்படும்.
திருவோணம் : புரிதல்கள் உண்டாகும்.
அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------


கும்பம்
மே 05, 2026

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். கலை துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதில் இருந்த தாமதங்கள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
சதயம் : ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : தாமதங்கள் விலகும்.

---------------------------------------


மீனம்
மே 05, 2026

வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல்கள் அமையும். உடன் இருப்பவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அளவுடன் இருக்கவும். வர்த்தக பணிகளில் வரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : வரவுகள் மேம்படும்.

---------------------------------------