dark_mode
Image
  • Thursday, 07 May 2026

ராசிபலன் 08-05-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 08-05-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 08-05-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்
மே 08, 2026

மனதளவில் உத்வேகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். மறைமுக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


ரிஷபம்
மே 08, 2026

செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும் அனுபவமும் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பயணம் முலம் புதிய அனுபவம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விமர்சனங்கள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் நீங்கும்.

---------------------------------------


மிதுனம்
மே 08, 2026

முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத கற்பனைகளால் சோர்வுகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


கடகம்
மே 08, 2026

உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


சிம்மம்
மே 08, 2026

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : தெளிவுகள் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


கன்னி
மே 08, 2026

நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வழக்கு பணிகளில் இருந்து வந்த காலதாமதங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.

---------------------------------------


துலாம்
மே 08, 2026

உறவினர்கள் வழியில் ஆதரவான சூழல் உருவாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். வீட்டினை மனத்திற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும்.
விசாகம் : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 08, 2026

புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோகப் பணியில் திருப்தியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

விசாகம் : தடைகள் குறையும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : திருப்தியான நாள்.

---------------------------------------


தனுசு
மே 08, 2026

உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


மகரம்
மே 08, 2026

சிந்தனைகளில் மாற்றங்கள் உருவாகும். உடலின் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நினைவாற்றலில் ஒரு விதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : மாற்றங்கள் உருவாகும்.
திருவோணம் : மந்தமான நாள்.
அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
மே 08, 2026

பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------


மீனம்
மே 08, 2026

உடன் பிறந்தவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவு மேம்படும். உழைப்புக்குண்டான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : அன்பு மேம்படும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரேவதி : மதிப்புகள் கிடைக்கும்.

---------------------------------------