dark_mode
Image
  • Friday, 29 November 2024

முளைகட்டிய தானியங்கள் நம் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் ..!

முளைகட்டிய தானியங்கள் நம் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் ..!

முளைகட்டும்போது தானியங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகரிக்கிறது. தானியங்களில் உள்ள வைட்டமின் ஏ அளவு இரட்டிப்பாகிறது. புரதங்கள் எளிதில் ஜீரணமாகும்.

முளைத்த தானியங்கள், நம் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடலில் கெட்ட கொழுப்புச் சத்து சேராமல் பார்த்துகொள்ளும் வெந்தயம், தொப்பையையும் குறைக்கும், உடல் எடையையும் குறைக்கும்.

வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றால் நிரம்பியது கொள்ளு. கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் தொப்பை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஓடிப்போகும்.

நாம் பெரும்பாலும் சமைத்த தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுகிறோம். அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதன் மூலம் பல கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் சி, முளைகட்டிய பருப்பு வகைகள் மற்றும் தானியங்களில் அதிகம் இருக்கிறது, மேலும் இது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றவை .

இரும்பு, புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் முளைத்த கொண்டைக்கடலையை நீங்கள் சாப்பிட்டால் மருத்துவரைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

கம்பு, மிகச் சிறந்த தானியமாகும். சத்துக்குறைபாடுள்ளவர்கள் உடலை வலுப்படுத்த முளைகட்டிச் சாப்பிடலாம். முளைத்த கம்பு உடல் வெப்பத்தை குறைக்கிறது மேலும் வயிற்று புண் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

முளைகட்டிய தானியங்கள் நம் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் ..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description