dark_mode
Image
  • Friday, 29 November 2024

குடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் அக்ரூட்.!!

குடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் அக்ரூட்.!!

சுமார் கால் கப், அல்லது 14 அக்ரூட் பருப்புகளில் 18 கிராம் நல்ல கொழுப்பு, 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், சிறிய அளவு மெக்னீசியம்,இரும்பு,கால்சியம்,மற்றும் பி வைட்டமின்கள் காணப்படுகின்றன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வால்நட் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வால்நட் சாப்பிடுவது நல்லது. மாங்கனீசு ஆரோக்கியமான எலும்புகளை ஆதரிக்கும் ஒரு கனிமமாகும், இது கொலாஜன் உற்பத்தி மற்றும் காயம் குணப்படுத்துவதற்கு தேவைப்படுகிறது. அக்ரூட் பருப்புகள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட ஆக்சிடென்ட்களால் நிரம்பியுள்ளன, அவை புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பிய நோய்களின் துவக்கம் மற்றும் முன்னேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

 
 
அக்ரூட் பருப்புகளில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் குடலில் ஏற்படும் பிரச்சனைகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் நோய் விளைவுகளை குணப்படுத்தவும் உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வால்நட் பருப்பில் ஒமேகா 3 உள்ளிட்ட நல்ல கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க இது உதவும். மேலும் மிகவும் ஒல்லியான உடல் உடையவர்கள் சற்று உடல் எடையை அதிகரிக்கவும் வால்நட் பருப்பு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வால்நட் பயன்படுகிறது. எனவே ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description