dark_mode
Image
  • Friday, 29 November 2024

தொண்டை புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும் மிளகு !!

தொண்டை புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும் மிளகு !!

மிளகு தொண்டை வலி, தொண்டை வீக்கம், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.

மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் மிளகில் டீப் போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். மேலும் குழந்தைகளின் உணவில் மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகினை சேர்த்தால் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

மேலும் வெறுமையாக வாயில் போட்டு தினசரி காலை மாலை என்ற அளவில் மென்று வந்தால் பற்கள் வெண்மையாகும். பற்களின் உறுதியும் அதிகரிக்கச் செய்யும்.

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசிவந்தால் முடி வளரும். முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும்.

தொண்டை புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும் மிளகு !!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description