கரும்பு ஜூஸ் குடித்தால் நடக்கும் அற்புதங்கள்..!
கரும்பு ஜூஸ் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட கரும்பு ஜூஸ் பயன்கள் குறித்து காண்போம்
தோல் பளபளப்பு
தங்களுக்கு வயதான முக தோற்றம் ஏற்படுவதை விரும்புபவர்கள் யாருமே இல்லை.
வயது ஏற, ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து, முதுமைத் தோற்றம் ஏற்படவே செய்வதை தடுக்க முடியாது.
எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் கரும்பு ஜூஸ் பருகுவது சிறந்த பலன்களைத் தருகிறது. இதிலிருக்கும் ஆன்ட்டி - ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் கூட்டுப்பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தன்மையை கூட்டுகிறது. தோலில் ஒரு பளபளப்பு தன்மையை கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி அருந்த வேண்டிய சிறந்த பானமாக கரும்பு ஜூஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துகள் அதிகம் இருப்பதால், இவை குழந்தை குறைபாடுகளோடு பிறக்கும் நிலையை தடுக்கிறது. மேலும் பெண்கள் கரும்பு ஜூஸை அடிக்கடி பருகி வந்தால், அவர்களின் கருப்பையில் கரு முட்டைகளை உற்பத்தி அதிகரித்து விரைவில் அப்பெண்கள் கருவுற உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செரிமான சக்தி மேம்பட
பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவர்களின் வயிற்றினுள்ளே செரிமான அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகள் ஆகும்.
கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும். அதன் வேதியியல் சமச்சீர் தன்மையையும் சரியான விகிதத்தில் வைக்கிறது. எனவே செரிமானத் திறன் மேம்பட விரும்புவார்கள் தினமும் ஒரு வேளை கரும்பு ஜூஸ் அருந்துவது நல்லது.
சிறுநீரக தொற்று நோய்கள்
சிறுநீரகம் சார்ந்த உறுப்புகளின் சுகாதாரத்தை முறையாக பேணாமல் இருந்தால் சிறுநீரக தொற்று வியாதிகள் உண்டாகின்றன. இந்த நோய் ஏற்பட்டவர்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
தினமும் இருவேளை கரும்புச் சாறில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் எத்தகைய சிறுநீரக தொற்று வியாதிகளும் வெகு விரைவில் குணமாக உதவும். மேலும் கரும்புச் சாறில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தோடு சிறுநீரகத் தொற்று வியாதி, பிராஸ்டிரேட் சுரப்பிகளின் வீக்கம், பால்வினை நோய்கள் போன்றவை ஏற்படாமலும் காக்கிறது.
பற்சொத்தை பிரச்சினைக்கு
பொதுவாகவே பற்களில் சொத்தை ஏற்பட்டவர்கள், சுகாதாரத்தை முறையாக பேணாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் இந்த வாய் துர்நாற்றம் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக கரும்பு ஜூஸ் இருக்கிறது. கரும்பு பயிரில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. பற்சொத்தை போன்றவை ஏற்படாமல் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கிறது.