முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நீலகிரி, குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த பிபின் ராவத் மனைவி மற்றும் 11 இராணுவ அதிகாரிகளும் மரணமடைந்தனர். இவர் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
முப்படை தளபதி பிபின்ராவத்தின் மறைவிற்கு பிறகு இந்தியாவின் ராணுவ தலைமை தளபதியாக இருந்த எம்.எம்.நரவனே தற்காலிக முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். புதிய முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை முப்படை தளபதி குழுவின் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினெண்ட் ஜெனரலான அனில் சவுகான், கடந்த 40 ஆண்டுகளாக பல முக்கிய ராணுவ ஆப்ரேஷன்களுக்கு தலைமை வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார். இவர் இந்தியாவின் இரண்டாவது முப்படைகளின் தலைமை தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முப்படை அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு, முப்படை தளபதி குழுவின் தலைவருக்கு உள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளின் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவர் அதன் தலைவராக இருந்து வந்தார். ஆனால் கடந்த 2019-ம் முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவியை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி இவரே, முப்படை தளபதி குழுவுக்கு நிரந்தர தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த குழுவின் தலைவராக மறைந்த தளபதி பிபின் ராவத் இருந்து வந்தார். இதையடுத்து முப்படை தலைமை தளபதியா அனில் சவுகான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description