வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் இன்று (டிசம்பர் 30) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். கடந்த 1991 - 96 மற்றும் 2001 - 06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்த கலிதா ஜியா, ஊழல் வழக்குகளில் சிக்கி, 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.