dark_mode
Image
  • Friday, 09 January 2026

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். வரும் பிப்ரவரி 1, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
 
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால், அன்று பட்ஜெட் தாக்கல் செய்தால் சந்தையில் உடனடி பொருளாதார தாக்கம் தெரியாது.
 
இதை கருத்தில் கொண்டு, பட்ஜெட்டை முன்னதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதா அல்லது மறுநாள் திங்கட்கிழமை தாக்கல் செய்வதா என்பது குறித்து நாடாளுமன்ற குழு இன்று கூடி முடிவெடுக்க உள்ளது. 
 
 
முன்னதாக 1999-ஆம் ஆண்டும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டபோது, ஒரு நாள் முன்னதாகவே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

related_post