துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'ஹே சினாமிகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'ஹே சினாமிகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் பிருந்தா கோபால் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் பிருந்தா இயக்குனராக அறிமுகமாமானார். காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கடந்த மார்ச் 5-ம் தேதி ஹே சினாமிகா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ஜியோ சினிமா தளத்திலும் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description