"ஜனநாயகன்" முதல் பாடல் 'தளபதி கச்சேரி' வெளியானது
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் விஜய், தொடர்ந்து அரசியலில் முழுமையாக பயணிக்க முடிவெடுத்துள்ளதால், 'ஜனநாயகன்' திரைப்படம் தான் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'ஜனநாயகன்' படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' பாடல் இன்று (நவ.8) வெளியானது.