dark_mode
Image
  • Saturday, 10 January 2026

தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது

தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகியிக்கும் ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் ஒரு பேரே வரலாறு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி யூடியூப்பில் பல சாதனைகளை குவித்து வருகிறது. ஜன நாயகன் ஒரு பேரே வரலாறு பாடல் லிரிக் வீடியோ வெளியாகி வெறும் அரை மணி நேரத்திற்குள்ளாக எந்தவித எதிர்மறையான விமர்சனங்களையும் பெறாமல் 5 லட்சத்திற்கும் அதிகமாக வியூஸ் பெற்று சாதனை படைத்து வருகிறது. இதில் ஒரு லட்சத்தில் 84 ஆயிரம் லைக்குளையும் பெற்றுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரைன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜன நாயகன்.

முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய படமாகவும், விஜய்யின் அரசியல் பயணத்திற்கான முக்கியமான ஒரு படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ரூ.1000 கோடி வசூல் குவிக்கவில்லை. ஆனால், தளபதி விஜய்யின் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற மகத்தான சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் திரைக்கு வந்த நந்தமுரி பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடக்க இருக்கிறது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்த மேடையில் விஜய் என்ன பேசுவார் என்பது தான் ரசிகர்கள் மட்டுமின்றி தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. ஏற்கனவே ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் அனல் பறக்க பேசி தொண்டர்களின் ஆரவாரங்களை பெற்றார்.

 

இந்த நிலையில் தான் ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பேரே வரலாறு என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யை விமர்சிப்பவர்களுக்கும், அவரை எதிர்ப்பவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. அப்படி என்ன இந்த பாடலில் ஸ்பெஷல் என்றால் ஒவ்வொரு வரிகளும் விஜய்யின் அரசியல் வருகையை பிரதிபலிக்கும் வகையிலும் மக்களிடையே உங்களுக்காக நான் வருகிறேன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன் தானே ஜன நாயகன்.

நம் மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது. தல வந்தால் தரமானவன். உன் பேரைக் கேட்டால் உடல் உறைஞ்சே போகும். விழி திரையில் பார்த்தால் மனம் கரைஞ்சே போகும் என்று பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக களத்தில் இவன் இருக்கும் வரையில் இருக்கும் பயமே என்ற வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது விஜய்யின் அரசியல் களத்தை சுட்டிக்காட்டுகிறது. இப்படியெல்லாம் பாடல் வரிகள் இருக்கும் நிலையில் அவரது டான்ஸ் இன்னும் கூடுதலாக பாடலுக்கும் சரி, படத்திற்கும் சரி பலம் சேர்த்துள்ளது. இந்தப் பாடலில் அவரது அதிரடி டான்ஸ் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

பொதுவாகவே விஜய் டான்ஸில் கில்லி தான். அதுவும் இது அவரது கடைசி படம். அப்போ சொல்லவா வேணும். பயங்கரமாக பட்டைய கிளப்ப ஆடி அசத்த வைத்திருக்கிறார். சேகர் மாஸ்டர் தான் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதே போன்று சுதன் மாஸ்டரும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் எழுதிக் கொடுக்க விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடல் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு பல்லவி சிங் தான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

related_post