dark_mode
Image
  • Friday, 09 January 2026

விஜயின் ஜன நாயகன் திரைப்படம் வெளியீடு ஒத்தி வைப்பு - பின்னணி என்ன?

விஜயின் ஜன நாயகன் திரைப்படம் வெளியீடு ஒத்தி வைப்பு - பின்னணி என்ன?

இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "கனத்த இதயத்துடன் இந்த தகவலை பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் திரைப்பட வெளியீடு நமது கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு நம் யாருக்குமே எளிதான ஒன்று அல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அது வரை உங்களுடைய பொறுமையையும், நீடித்த அன்பையும் கோருகிறோம். உங்களின் ஆதரவு தான் எங்களுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகன் படக்குழுவுக்கும் மிகப்பெரிய பலம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

related_post