திராட்சை சாறு பருகுவதன் பலன்கள்..!

திராட்சை பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. திராட்சை பல வகைகள் உள்ளன. அதில் கறுப்பு திராட்சை மிகவும் சிறந்தது.
திராட்சை பழம் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. உடல் வறட்சி, பித்தம், ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகளை வலுப்பெற செய்யும்.
திராட்சையில் இரும்பு சத்து உள்ளதால் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கும். திராட்சை இரத்த அழுத்த நோயை நீக்கும் தன்மை கொண்டது. திராட்சை புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மையும் உண்டு.ஆகிய நன்மைகள் திராட்சையில் உள்ளது.
திராட்சை ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில், திராட்சை சாறு குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும்.
திராட்சை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைகிறது.
ஜீரண கோளாறு நீக்கும் தன்மை கொண்டது. திராட்சை பசியை தூண்டும்.மற்றும் வயிற்றுப்புண், வாய்ப்புண் நீக்க வல்லது. மற்றும் சிறுநீர் எரிச்சல் நீக்க வல்லது. எலும்புகள் மற்றும் இருதயம் பலப்படுத்தும். இருமல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description