திமுக ஒரு தீயசக்தி!.. தவெக தூய சக்தி!... ஈரோட்டில் அதிரடியாக பேசிய விஜய்..
ஈரோடு பெருந்துறையில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் இன்று விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. திமுக சொன்னதை செய்யவில்லை.. பல வாக்குகளை கொடுத்தார்கள் ஆனால் நிறைவேற்றவில்லை.. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை அகற்றி விடுவோம் என்றார்கள்.. செய்யவில்லை.. இப்படி பல வாக்குகளை கொடுத்தார்கள்.
விஜய் சினிமா நடிகன் போல பேசுகிறார்.. பன்ச் வசனம் பேசுகிறார்.. என்று விமர்சனம் செய்கிறார்கள்,, நான் மக்களுக்கான அரசியலை பேசுகிறேன்.. அது அரசியல் இல்லையா? சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் '‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ என வசனம் பேசினார்.. அது சினிமா வசனம் இல்லையா?.. நீங்கள் பேசினால் அது சிலப்பதிகாரம்.. நான் பேசினால் மட்டும் அது சினிமா வசனமா?’ என கேள்வி எழுப்பினார் விஜய்.
மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் திமுகவை ஒரே வார்த்தையில் விமர்சிப்பார்கள்.. நான் கூட பலமுறை யோசித்திருக்கிறேன். எதற்காக இவ்வளவு கடுமையான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று.. ஆனால் தற்போது இவர்களை பார்க்கும்போதுதான் எனக்கு உண்மை புரிகிறது.. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சொன்ன அதே வார்த்தையை நான் இப்போது சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி. இரண்டு சக்திகளுக்கும் இடையில்தான் போட்டியே...
நீங்கள் செய்யும் எல்லா ஊழல்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. மக்களுக்கு எல்லாம் தெரியும்.. நான் பேசும் அரசியல் மக்களுக்கு புரியும்.. அது எனக்கு போதும்..
நீங்கள் ஊழல் செய்து கொள்ளையடித்த பணம் உங்களுக்கு துணை.. ஆனால் எனக்கு இந்த மக்கள்தான் துணை.. அதுதான் மாஸ்.. நான் அவர்கள் பக்கம் நிற்பேன் அவர்களும் என் பக்கம் நிற்பார்கள்.
இலவசங்களை கொடுத்து அதை ஓசி என சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள்.. இது என்ன மாதிரியான மனநிலை?.. மக்களின் வரிப்பணத்தில் இருந்து மக்களுக்கு கொடுத்துவிட்டு அதை இலவசம் என ஏன் சொல்கிறீர்கள்?.. நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை.. ஆனால் நீங்கள் செய்யும் அரசியலுக்கு எதிரானவன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜயை மக்கள் ஒரு நாளும் கைவிட மாட்டார்கள்.. நானும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன்’ என்று பேசினார்.