dark_mode
Image
  • Saturday, 10 January 2026

தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

திருப்பூர்: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க., வெற்றிபெறும்; விஜய் நல்லாட்சி வழங்குவார்' என, திருப்பூரில் செங்கோட்டையன் பேசினார்.

 

த.வெ.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நேற்று நடந்தது. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றிவாகை சூடப்போகிறது என்பதை இந்த கூட்டத்தை பார்க்கும்போதே உணரமுடிகிறது. தமிழகத்துக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேவையில்லை. விஜய்தான் முதல்வராகவேண்டும் என்கிற உணர்வோடு, அனைவரும் கூடியிருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப்பிறகு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார். முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில்முனைவோர், நுாற்றுக்கும்மேற்பட்டோர், த.வெ.க. வில் இணைந்தனர்.

related_post