dark_mode
Image
  • Friday, 09 January 2026

அரசியலை புரிஞ்சிக்கணும்: தொண்டர்களுக்கு திருமா அறிவுரை

அரசியலை புரிஞ்சிக்கணும்: தொண்டர்களுக்கு திருமா அறிவுரை

அரசியலை புரிஞ்சிக்கணும் : தொண்டர்களுக்கு திருமா அறிவுரை

 

' தி . மு . க , மற்றும் அ . தி . மு . க , வில் ஒரே நபர் மூன்றாயிரத்து நாற்பது ஆண்டுகளாக மாவட்டச் செயலர்களாக இருந்தாலும் , அக்கட்சியினர் ஏற்றுக் கொள்கின்றனர் . அதேபோல் வி . சி . , யினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என , வி . சி . , தலைவர் திருமாவளவன் அறிவுரை வழங்கி உள்ளார் . அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது

 

: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனத்தில் , கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்து தலைமைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

 

மாவட்டச் செயலர்கள் வயது வரம்பு நாற்பத்து ஐந்து என்ற அடிப்படையிலும் , கட்சியின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் செய்த நன்மை அடிப்படையிலும் மா . செ . , க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

 

. தி . மு . க , மற்றும் அ . தி . மு . க . , வில் , ஒரே நபர் மூன்றாயிரத்து நாற்பது ஆண்டுகளாக மாவட்டச் செயலராக இருக்கின்றனர் . அக்கட்சிகளில் நியமிக்கப்படுவோரைக் காட்டிலும் , தீவிரமாக களப்பணியாற்றக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

 

ஆனாலும் , தலைமை எடுத்த முடிவு என்பதால் , யார் நியமனத்துக்கு எதிராகவும் அக்கட்சியினர் கேள்வி எழுப்புவதில்லை

 

கட்சி தலைமை எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்று நம்பி , தலைமை எடுக்கும் முடிவை ஒப்புக்கொள்ளும் நிலை வி . சி . , யிலும் வர வேண்டும் . அப்படியொரு நிலையை தான் , வி . சி . , யினரிடம் எதிர்பார்க்கிறேன் . துாக்கம் இல்லாமல் பணியாற்றுகிறேன் . அதனால் , எனக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் உள்ளன . இருந்தாலும் , கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்

 

ஒரு தொகுதியில் , தகுதியான நபர் இல்லையென்றால் , மற்றொரு தொகுதியில் சீனியாரிட்டி அடிப்படையில் இருப்பவர்களை நியமிக்கிறோம் . இவற்றை கட்சியினர் ஏற்க வேண்டும்

 

கட்சி யை சீர்குலைக்கும் வகையில் , மனதில் பட்டதையெல்லாம் சமூக வ லை தளங்களில் பதிவிடக் கூடாது . அரசியல் புரிதலோடு தான் எந்த விஷயத்தையும் அணுக வேண்டும் . இனி மேலும் , நிர்வாகிகள் நி யமிக்கப்பட உள்ளனர்

 

ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களில் கூட , ஒருசில மாற்றங்கள் இருக்கும் . ஆனால் , முழுமையாக மாற்ற முடியாத நெருக்கடி உள்ளது . இவ்வாறு அவர் கூறினார் . செய்தியை கேட்டதற்கு நன்றி . தொடர்ந்து செய்திகளை கேட்க தினமலர் இணையதளம் மற்றும் தினமலர் மொபைல் ஆப் ஆகியவற்றை பின் தொடருங்கள் .

related_post